Kogilavani / 2015 மார்ச் 13 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மதுரங்குளியில் புதிய தபால் நிலையமொன்று வியாழக்கிழமை (12) காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம், மின்சக்தி, எரிசக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி, புத்தளம் பிரதேச சபை தலைவர் நிமல் பமுனு ஆராய்ச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புத்தளம் பிரதேச சபை எல்லைக்குள் இரு பிரதான நகரங்களாக முந்தல் நகரமும் மதுரங்குளி நகரமும் காணப்படுகின்றன.
இவற்றில் முந்தல் நகரம் பிரதான நிர்வாக நகரமாகவும் மதுரங்குளி நகரம் பிரதான வர்த்தக நகரமாகவும் காணப்படுகின்றன.
புதிய தபால் நிலையம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் இப்பிரதேச மக்களின் மிக நீண்ட கால பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.


5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago