Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 மார்ச் 14 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
ஐக்கிய இராச்சியம், இலங்கை சோனகர் சங்க ஏற்பாட்டில், கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான பிரத்தியேக சந்திப்பொன்று, லண்டன், பாக்லேன் ஹில்டனில் நடைபெற்றது.
ஊடகவியலாளரும் பிரபல சமூக சேவகருமான சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
'இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர், குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். எனது குழந்தைகளின் நண்பர்கள் கூட இதை எங்கள் வீட்டிலேயே வைத்து சொல்கிறார்கள். நிச்சயமாக இது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்பதே அவசியம்.
கடந்த காலத்தில், பொதுபல சேனா எனும் அமைப்பினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய இன்னல்களின் விளைவு என்ன என்பதை, தேர்தலின் முடிவு தெட்டத்தெளிவாக எடுத்தியம்பியிருக்கிறது. இதனால் குறித்த அமைப்பை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்' என்று தெரிவித்தார்.
குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஊடகவியலாளர் இர்பான் இக்பால், 'ஜனாதிபதி பதவியேற்றதும் ரூவாஹினியில் இடம்பெற்ற நேர்காணலில், தன்னை யாரும் அதிமேதகு ஜனாதிபதி என அழைக்க வேண்டாம் என்று கேட்டிருந்தார். ஆனால் அதை தாண்டிய எங்கள் அன்பை வெளிப்படுத்த, தற்போது நல்லாட்சியை வழி நடாத்திக்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை 'மக்கள் ஜனாதிபதி' என நாம் அழைக்க விரும்புகிறோம்' என்று தெரிவித்ததுடன் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நிகழ்வில், ஐக்கிய இராச்சியத்துக்கான ஜனாதிபதி பிரதிநிதிகள் குழு உறுப்பினராக விஜயம் செய்த மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, ஜனாதிபதி செயற்குழு முக்கியஸ்தரும் முன்னாள் ஐக்கிய இராச்சியத்துக்கான பிரதித் தூதருமான அம்சா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் முக்கிய முஸ்லிம் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
2 hours ago