Thipaan / 2015 மார்ச் 14 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்
புத்தளம் வடக்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட ஸெய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் திருமதி பெலஜியா அபுல்ஹூதா தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில், புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
புனித உம்ரா கடமையினை நிறைவேற்ற மக்கா சென்றிருந்த நகர சபைத் தலைவர் இன்று நாடு திரும்பியதும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதோடு ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் புத்தளம் கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ. ஸன்ஹிர் உட்பட கல்வி அதிகாரிகள், பிரமுகர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago