2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மா ஓயாவில் குதித்த சந்தேக நபர் பலி

Sudharshini   / 2015 மார்ச் 15 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்,எம்.எஸ். முஸப்பிர்

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயிக்கால, சிந்தாத்ரிய பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை, கைது செய்வதற்கு சென்ற பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மா ஓயாவில் குதித்த அதேயிடத்தை சேர்ந்த ஜோய் (35) என்பவர்  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வென்னப்புவ, வயிக்கால சிந்தாத்ரிய பிரதேசத்தில் மா ஓயாவுக்கு அருகில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றின்

பின்பக்கமாக சூதாட்ட நிலையம் ஒன்று நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளது.அந்நிலயத்தின் மீது பொலிஸார் சனிக்கிழமை இரவு திடீர் சுற்றிவளைப்பை  மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். இதில் மூவர்  மா ஓயாவில் பாய்ந்து  தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் நீந்தி  ஆற்றின் மறுப்பக்கமாக சென்று தப்பியுள்ளனர். ஆயினும் ஓருவர்  ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து  கடற்படையினரின் உதவியுடன்  இன்று ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X