2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுமார் 17 இலட்சம் ரூபாய் கொள்ளை: இருவர் கைது

Kogilavani   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

அசலக்க பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியிலுள்ள கூட்டுறவு பெற்றோல் நிரப்பு நிலையத்தில்; 17,1ஃ2இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இருவரை கொச்சிக்கடை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை(19) கைதுசெய்துள்ளனர்.

நீரகொழும்பு, போருதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இருவரும் அளவுக்கதிமாக பணத்தை செலவு செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் கைதுசெய்து விசாரணைக்கு உட்டுபடுத்தியுள்ளனர். இதன்போதே இவ்விருவரும் கூட்டுறவு நிலையத்தில் கொள்ளையிட்டமை தொடர்பில் தெரியவந்துள்ளது.

இவர்கள் கூட்டுறவு பெற்றோல் நிலையத்தின் பெட்டகத்திலிருந்து பதினேழு இலட்சத்து 40 ஆயிரத்து 577 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X