2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கடவுச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

Gavitha   / 2015 மார்ச் 21 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சட்டவிரோதமாக கடவுச்சீட்டுக்களையும் தேசிய அடையாள அட்டைகளையும் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபரொருவரை நேற்று கைது செய்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பிலிருந்து சிலாபத்துக்குச் சென்ற பஸ்ஸில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றினையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 22 கடவுச்சீட்டுக்களையும் 8 தேசிய அடையாள அட்டைகளையும் மீட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X