Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மார்ச் 24 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரமொழி செய்தியாளர் ஒருவர் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புத்தளம்- கொழும்பு வீதி, பாலாவி எனும் பிரதேசத்தில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய காணி ஒன்றில், சிலர் அத்துமீறி நுழைந்து கம்பி வேலி அமைத்துள்ளனர்.
இதனையறிந்த புகைப்படமெடுக்கச் சென்றபோது மேற்படி குழுவினர் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தாக்குதலையும் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இக்காணியை தம்வசப்படுத்திக் கொள்வதற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
செய்தி சேகரித்துகொண்டிருந்த போது, சிலர் தன்னை கீழே வீழ்த்தி தாக்கியதாகவும் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்தெடுத்து கொண்டதாகவும் கடும் முயற்சியினால் புகைப்படக் கருவிகளைப் பாதுகாத்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்ட செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, செய்தியாளரை தாக்கியவரை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago