Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 மார்ச் 28 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
'அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சகவாழ்வு' எனும் தலைப்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31) மாலை 6.30 மணிக்கு, கொழும்பு 10இல் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் விஷேட பகிரங்க சொற்பொழிவு ஒன்றை, தேசிய சூரா சபை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வின் விஷேட பேச்சாளராக பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வின் கலந்துரையாடப்படும் விடயம் தொடர்பான பார்வையாளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு விஷேட அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சூரா சபை சமூகத்தின் நடைமுறை விவகாரங்களை மையமாக வைத்து நடாத்தி வரும் பகிரங்க சொற்பொழிவுத் தொடரில், இது இரண்டாவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை 0766-270-470 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்துவதனூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago