2025 மே 09, வெள்ளிக்கிழமை

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் அனுசனையுடன் சபாப் இஸ்லாமிய வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில் 17ஆவது தடவையாக இலவசமாக நடத்தப்படும் கண்ணில் வெள்ளைபடர் படருவதை அகற்றும் சத்திரசிகிச்சை முகாம், புத்தளம் குவைட் வைத்தியசாலையில் இம்மாதம் 24, 25, 26, 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்று வருகின்றது.
இதன் விஷேட நிகழ்வு வியாழக்கிழமை (26) நடைபெற்றது.

இதற்கு பிரதம அதிதியாக சவுதிஅரேபிய நாட்டைச் சேர்ந்த கலாநிதி முஹம்மத்த வா ஜுனைட், கலாநிதி முஹம்மத் பைசல் முஹம்மதீன் மற்றும் சர்வதேச நிவாரண அமைப்பின் இணைப்பதிகாரி அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் சாபாப் இஸ்லாமிய நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ரஷீட், பிரதிப் பணிப்பாளர் எம். எஸ். எம். தாசிம், புத்தளம் நகர பிதா பாயிஸ் பாகிஸ்தான் நாட்டு கண் சிகிச்சை நிபுணத்துவக் குழுவின் இணைப்பதிகாரி பகுர்தீன், புத்தளம் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அப்துல்லா ஹஸரத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தந்த 600க்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த சத்திரசிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கிழக்கு மாகாணத்துக்கான சத்திர சிகிச்சை முகாம் காத்தான்குடியில் இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிறுவனம் ஒரே தடவையில் வருடத்துக்கு 1000க்கும் மேற்பட்ட சிங்கள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி  கண் சத்திரசிகிச்சை முகாம் நடாத்தி வருகின்றது. இந்த கண் சத்திர சிகிச்சையை பாகிஸ்தான் நாட்டிலிலிருந்து வருகை தந்த விஷேட கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் இதுவரை 20,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக கண் சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X