2025 மே 09, வெள்ளிக்கிழமை

வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கான பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கான பிரதான அலுவலகம் இன்று சனிக்கிழமை (28) வண்ணாத்திவில்லு பிரதேச சபைத் தலைவர் இந்திக்க சேனாதீர தலைமையில், உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன், வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கலா மன்றம் மற்றும் வாராந்த சந்தை கட்டடத்தொகுதியும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மினசக்தி எரிபொருள் துறை இராஜாங்க  அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பிரியங்கர ஜயரத்ன, புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ், புத்தளம் தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எம். என். எம். நஸ்மி, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X