2025 மே 09, வெள்ளிக்கிழமை

நெல் களஞ்சியசாலையை நோக்கி விவசாய அபிவிருத்தி சங்கத்தினர் படையெடுப்பு

Thipaan   / 2015 மார்ச் 31 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புதிய அரசினால் நெல்லின் கொள்வனவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, நெல்லினை மொத்தமாக அரசுக்கு விற்பனை செய்வதற்காக, புத்தளம் மாவட்ட கிராம விவசாய அபிவிருத்தி சங்கத்தினர்  புத்தளம் நெல் களஞ்சிய சாலையை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர்.

புத்தளம் நெல் களஞ்சியசாலை அமைந்துள்ள சேர்விஸ் வீதியில், நெல்லினை அரசுக்கு வழங்குவதற்காக திங்கட்கிழமை (30) மதியம் அதிகமான வாகனங்கள் நெல் மூடைகளோடு நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதுவரை காலமும் தனியார் வியாபாரிகளுக்கு, ஒரு கிலோ நெல்லினை 32 ரூபாய்க்கே விற்பனை செய்து வந்ததாக கிராம விவசாய அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்தனர்.

தற்போது புதிய அரசு வகுத்துள்ள பொருளாதார திட்டத்தின் மூலமாக ஒரு கிலோ சம்பா ரக நெல்  50 ரூபாவுக்கும் ஒரு கிலோ நாடு ரக நெல்  45 ரூபாவுக்கும் அரசுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

இதன் மூலம் தாமும் விவசாயிகளும் பெரிதும் நன்மையடைவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கிராமங்களில் கமத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் தாம் உற்பத்தி செய்யும்  நெல்லினை விவசாய அபிவிருத்தி சங்கங்களுக்கு ஒப்படைத்து அந்த விவசாய அபிவிருத்தி சங்கங்களினால் அரசுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்பகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X