2025 மே 08, வியாழக்கிழமை

2,500 பேருக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த 2,500 பேருக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு  நேற்று செவ்வாய்க்கிழமை (31) முதல் நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினாலேயே இவ் உலருணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வு, சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கை;கான பிரதிநிதி அஷ்ஷெய்க் எம். ஜே இம்ரான் தலைமையில் நடைபெற்றது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பிரதிநிதிகளான கலாநிதி அஷ்ஷெய்க் முஹமட் பா ஜுனைட் மற்றும் அஹமட் அல் குகைலி ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.

4,500 ரூபாய் பெறுமதியான இந்த உலருணவுப் பொதிகள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி பிரதேசத்துக்கு 500 பொதிகளும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு 500 பொதிகளும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய இரு பிரதேசங்களுக்கு தலா 500 வீதம் 1,000 பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன்  வட மாகாணத்தில் பாவற்குளம் பிரதேசத்தில் 250 பொதிகளும் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சுங்காவில் பிரதேசத்துக்;கு 250 பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இஸ்லாமிய நிறுவனத்தின் அதிகாரிகள்,  மேற்குறித்த பகுதிகளுக்கு சென்று நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X