Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். எஸ். முஸப்பிர்
சிறியளவிலான 17 ஹெரோய்ன் பக்கட்டுக்களை விழுங்கிய நபரொருவர், கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேக நபர் கடந்த சில காலங்களாக ஹெரோய்னுக்கு அடிமையாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்தேக நபருக்கு கொழும்பிலிருந்து ஹெரோய்ன் கிடைக்கப்பெறுவதாகவும் அவ்வாறு கிடைக்கும் ஹெரோய்னை இப்பிரதேசங்களில் விற்பனை செய்வதோடு, தானும் உபயோகப்படுத்துவதற்கு பழக்கப்பட்டிருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஹெரோய்ன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு குறித்த சந்தேக நபரைக் கைது செய்யச் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற போது, தான் மறைத்து வைத்திருந்த 17 சிறியளவிலான ஹெரோய்ன் பக்கட்டுக்களை சந்தேகநபர் ஒரேயடியாக வாயில் போட்டு விழுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவரைக் கைது செய்த பொலிஸார், கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்து விழுங்கிய ஹெரோய்ன் பக்கட்டுக்களை வெளியில் எடுக்க முயற்சித்த போதும் அது பலனளிக்காத நிலையில் அச்சந்தேக நபர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் புத்தளம் வைத்தியசாலையிலும் சந்தேக நபர் விழுங்கிய ஹெரோய்ன் பக்கட்டுக்களை வெளியில் எடுக்க முடியாது போனதால் அந்நபர் பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் விழுங்கிய ஹெரோய்ன் பக்கட்டுக்களை வெளியில் எடுப்பதற்காக சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டியேற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் உடுமலகல தலைமையிலான குழுவினரே இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டதோடு, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .