2025 மே 08, வியாழக்கிழமை

வாயு சிலிண்டர்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற சுயதொழில் வேலை வாய்ப்புகளில் ஈடுபடும் குடும்பத்தினருக்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் வாயு அடுப்புகள் மற்றும் வாயு சிலிண்டர்களை வழங்கி வைத்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினரின் பாலாவி காரியாலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (5) மாலை அவர் இந்த உதவி பொருட்களை கையளித்தார்.

'அன்றாடம் காலை வேளைகளில் கடைகளுக்கு அப்பம், பிட்டு போன்ற காலை உணவுகளை தயாரித்து வழங்கும் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பத்தினருக்கு இவைகள் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது நேரகாலம் மற்றும் விறகு செலவுகளை மீதப்படுத்திக்கொள்ள முடியும்' என மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X