Princiya Dixci / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்
ஆறு மாதக் குழந்தை சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் அக்குழந்தையின் தந்தை மற்றும் சித்தி ஆகியோரைக் கைது செய்துள்ளதாக கருவலகஸ்வெ வ பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், கருவலகஸ்வெ வ, எட்டாம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயதான ஹிருனி மதுமாலி குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வெளிநாடுக்கு வேலைக்கு சென்றுள்ள நிலையில் குழந்தையின் தாய் அக்குழந்தையை சகோதரியின் பராமரிப்பிலேயே விட்டுசென்றுள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் தந்தையும் சித்தியும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 4ஆம் திகதி காலை 8 மணியளவில் இக்குழந்தை திடீரென சுகயீனமுற்ற நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், அனுமதிக்கப்பட்டு 30 நிமிடங்களில் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், குழந்தையின் சடலம் பிரேத சோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிலாபம் வைத்தியசாலையில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற பிரேத சோதனையின் போது, தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே குழந்தைக்கு மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே குழந்தையின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைக்குழந்தை இருக்கும் போது குழந்தையின் தாய் வெளிநாடு சென்றமை தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago