Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
ஆராட்சிக்கட்டு பிரதேச சபை பிரிவில் உள்ளடக்கப்பட்டிருக்கும் உடப்பு, ஆண்டிமுனை வாக்காளர்களுக்கு நியாயம் பெற்று தருமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹுஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிதாக வரையப்பட்டுள்ள உள்ளூராட்சி எல்லைகள் நிர்ணயத்தின் கீழ், தமிழ்மக்கள் வாழும் உடப்பு மற்றும் ஆண்டிமுனை மக்களுக்கு அவர்களின் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
உடப்பு கிராம சேவகர் பிரிவு (594), உடப்பு கிராம சேவகர் பிரிவு (594 பீ) ஆண்டிமுனை (594 ஏ) ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒரு உறுப்பினர் மாத்திரமே தெரிவு செய்யப்பட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மூன்று கிராம சேவகர் பிரிவுகளிலும் 5837 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்காக ஒரு உறுப்பினர் மாத்திரம் தெரிவு செய்யப்படுவது பாரிய அநீதியாகும்.
மூன்று உறுப்பினர்கள் இவர்களுக்காக தெரிவுசெய்யப்பட வேண்டும். குறைந்தது உடப்பு மற்றும் ஆண்டிமுனை ஆகியன தனி வட்டாரங்களாக உருவாக்கப்பட்டு இரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமாறு அன்பாக வேண்டுகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago