2025 மே 08, வியாழக்கிழமை

இடிமண் கரை வீதிக்கான வீதி விளக்குகளை பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

Sudharshini   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மணல்குன்று தம்பபன்னி கிராமத்துக்கு மேற்கு புறமாக அமைந்துள்ள இடிமண் கரை வீதிக்கான வீதி விளக்குகளை பொருத்தி தருமாறு பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தம்பபன்னி கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 122 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இக்கிராம மக்கள் வெளியிடங்களுக்கு சென்று இருள் சூழ்வதுக்கு முன்னதாகவே வீடு வந்து சேர்ந்து விடுவதாகவும் தவறுமிடத்து இருளில் பாம்பு கடிக்கு ஆளாக நேரிடுவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தனியார் வகுப்புகளுக்கு செல்லும் தமது பிள்ளைகள் இருளுக்கு முன்னதாகவே வீடு திரும்ப எத்தனிப்பதால், அவர்களது பாடங்களை பூரணப்படுத்த முடிவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கிராம பொது மக்கள் இணைந்து வீதி விளக்குகளை கொள்வனவு செய்து வைத்திருப்பதாகவும் அவற்றை பொருத்தி தர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X