2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய 17 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

நைனாமடம் வென்னப்புவ கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்து மீன்பிடியில்  ஈடுபட்டதாகக் கூறப்படும் 17 மீனவர்களை கைதுசெய்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நைனாமடம் முட்டுவ பிரதேசத்திலேயே திங்கட்கிழமை (18) இந்த மீனவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பாவிப்பதனால் பிரதேசத்தில் மீனவத் தொழிலுக்கு பாரிய அழிவு ஏற்படும் என்று  ஒன்பது கடற்றொழில் சங்கங்களின் மீனவர்கள் சிலர், கடற்றொழில் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, கடற்றொழில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில்  செய்த முறைப்பாட்டின் பிரகாரமே இந்த மீனவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .