Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 06 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். ஷாஜஹான்
உடைந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டடத்தை ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக அக்கட்டடத்திலிருந்து நோயாளிகளையும்; உபகரணங்களையும் அகற்றியுள்ள நிலையில், தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (5) மாலை விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
நீர்கொழும்பு தம்மிட்ட கார்டினல்; கூரே நிலையத்தின் மண்டபத்தில் அருட் தந்தை பெட்ரிக் பெரேரா தலைமையில் இக்கூட்டம் நடைப்பெற்றது.
மேல் மாகாண சபையின் கீழ் உள்ள நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்குமார குணரத்ன அங்கு உரையாற்றும் போது, வைத்தியசாலையை மீள கட்டியெழுப்புவதுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது நிதிப்பிரச்சினையாகும். மாகாண சபையினால் பெரும் நிதியை இதற்காக ஒதுக்க முடியாது. கடோல்கலே பிரதேசத்தில் உள்ள ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே உள்ளக விளையாட்டரங்கை வெளிநோயாளர் பிரிவாக தற்காலிகமாக பயன்படுத்த முடியும் என அவர் அதன்போது தெரிவித்தார்.
அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா அங்கு உரையாற்றுகையில்,
இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக மேல் மாகாண சபையில் ஆராய வேண்டும்.
அவ்வாறு நடந்தால் வைத்தியசாலையை விரையில் அபிவிருத்தி செய்ய முடியும். வைத்தியசாலையில் தற்போது எழுந்துள்ள பிரச்சனைத் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விரையில் நல்ல முடிவொன்றை எடுக்கவுள்ளேன். சகலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் மேலும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் சரத்குமார குனரத்ன, மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து, நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர, சர்வ மதத் தலைவர்கள், நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago