Thipaan / 2015 ஜூலை 27 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவகத்தேகம கலேவவ பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அச்சிறுமியின் சிறிய தந்தையையும் அச்சிறுமியின் காதலன் என கூறப்படும் ஒருபிள்ளையின் தந்தையொருவரையும் கைதுசெய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்குறித்த சிறுமி பாடசாலைக்கு செல்வதில்லையெனவும் சிறுமியின் தந்தை உயிரிழந்த பின்னர் அவரின் தாய் இன்னொருவரை திருமணம் செய்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த சிறுமியின் சிறிய தந்தையான குறித்தநபர், சிறுமியை பல முறை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார். இதனையடுத்தே சிறுமி, ஒரு பிள்ளையின் தந்தையான தனது காதலனுடன் சென்றுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
தனது மகளைக் காணவில்லையென சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்தே சிறுமியின் சிறிய தந்தையையும் காதலனையும் கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago