Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர
புத்தளம் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தின் திருவிழாக்காலத்தை முன்னிட்டு தலவில செல்லும் பொதுமக்களுக்காக விசேட புகையிரத சேவையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவின் போது, ஒவ்வொரு வருடமும் நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் தலவில நோக்கிப் பயணிப்பது வழமையாகும். எனினும், இம்முறை பாடசாலை விடுமுறைக்காலம் என்பதால் பொருமளவிலான பக்தர்கள் தலவில நோக்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்பொருட்டு, கொழும்பிலிருந்து பாலாவி வரையில் விசேட புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பாலாவியில் இருந்து தலவில நோக்கி பயணிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.



2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago