Thipaan / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
கருவலகஸ்வெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நீல் வீரசிங்க நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலஞ் சென்ற முன்னாள் அமைச்சர் த.மு.தசநாயக்காவின் ஆதரவுடன் 1997ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர், பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கருவலகஸ்வௌ பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, கருவலகஸ்வெவ பிரதேச சபைத் தலைவராக இரு தடவைகள் பதவி வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 29ஆம் திகதி ஆனமடுவையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியில் தேர்தல் பிரசாரக் சுட்டத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
முன்னாள் பிரதேச சபைத் தலைவரான தன்னை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதேச அரசியல் தலைவர்களோ, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அரசியல் தலைவர்களோ பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதால் தான் மனவிரக்தி அடைந்ததாகவும் அதனையடுத்தே நஞ்சருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago