2025 மே 22, வியாழக்கிழமை

23 ஆயிரம் குடும்பங்களை உள்ளடக்கி சேதனப் பசளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 25 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

'வடமத்திய மாகாணத்தில் 23 ஆயிரம் குடும்பங்களை உள்ளடக்கி சேதனப் பசளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது' என கமநல சேவைகள் பிரதி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.

இவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளையும் அரசாங்கம் இலவசமாக வழங்குவதோடு உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகளை கிலோவொன்றை 8 ரூபா வீதம் கொள்வனவு செய்யவும் கொள்வனவு செய்யப்பட்ட சேதனப் பசளையை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மானிய அடிப்படையில் இரசாயனப் பசளையை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு 60 பில்லியன் ரூபாவினை செலவு செய்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X