2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

7 வயது சகோதரனின் மகள் மீது வல்லுறவு; சிறிய தந்தை கைது

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 28 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
 
தனது சகோதரனின் ஏழு வயதுடைய குழந்தையை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டினையடுத்து 45 வயதுடைய சந்தேக நபரை நேற்று மாலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சிறுமியின் பெற்றோர் அவர்களது வீட்டில் இரவுவேளையில் நித்திரை கொண்டதன் பின்னர், சிறுமி மீது சந்தேக நபர் இவ்வாறு குற்றம் இழைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தமது மகள் மீது மேற்கொள்ளப்பட்ட இக்குற்றம் தொடர்பில் அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .