2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

2011இல் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் செலான் வங்கி

A.P.Mathan   / 2011 மார்ச் 28 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் தனது செயற்பாடுகளில் ஒட்டுமொத்தமாக பிரமாண்டமானதொரு வளர்ச்சியை பதிவு செய்த செலான் வங்கியானது, தனது வரலாற்றில் முன்னொருபோதுமில்லாதவாறு மிக அதிகமான இலாபத்தை 2010ஆம் ஆண்டில் பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் செலான் வங்கியின் இலாபத்தன்மையானது 126 வீதம் அதிகரித்துள்ள அதேநேரம், செயற்படா சொத்துக்களின் (NPA) பெறுமதி 8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறானதொரு சிறப்பான செயற்பாடு இடம்பெற்றுள்ள பின்னணியில், இலங்கையின் ஒட்டுமொத்த வர்த்தக குறியீடுகளில் முன்னணி வகிக்கும் ஒன்றாக பொறாமைப்படத்தக்க வகையில் தன்னை ஸ்திரப்படுத்தி மேலும் கூட்டிணைந்து செயற்படுவதற்கு செலான் வங்கி எதிர்பார்க்கின்றது.

செலான் வங்கியின் தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொட கூறுகையில், ''எமது மீள்பிறப்பு மற்றும் திருப்புமுனையான செயற்பாடுகள் இப்போது எமக்குப் பின்னால் உள்ளது. அது சமகாலத்து வரலாறாகும். வங்கி இப்போது உறுதியான செயற்பாட்டுடனான புதுத்தெம்பை கொண்டுள்ளது. அத்துடன்  மிகச் சிறந்த பலம் மற்றும் மிகச் சிறந்த சிரத்தை என்பவற்றுடனான நிலையை இன்னும் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்'' என்றார்.

தற்போது கிடைக்கக் கூடியதாகவுள்ள வளங்களின் அடிப்படையில் அனுகூலமான செயற்பாட்டு தராதரங்களில் கவனம் செலுத்தியுள்ள செலான் வங்கியானது, நிறுவனத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மேலும் சிறப்பான பெறுபேறுகளை வழங்கும் வகையில் எதிர்கால வர்த்தக உபாயங்களை அபிவிருத்தி செய்வதற்கு இப்போது எதிர்பார்க்கின்றது. அத்துடன் மிக வேகமான மாற்றமடைந்து வரும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கிடைக்கக் கூடிய அற்புதமான புதிய வாய்ப்புகளுக்காக தன்னை தயார்படுத்துவதன் மூலம் பங்குதாரர்களுக்கு மேலும் பெறுமதிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

வங்கியியல் துறையின் தராதரத்தை செலான் வங்கி மதிப்பீடு செய்துள்ளதுடன் மிகையான அளவு ஊழியர்கள் உள்ளனர் என்பதையும் அடையாளம் கண்டுள்ளது. அதன் பிரகாரம், நிர்வாக சபையில் செயல்திறனை அதிகரிக்கவும் அதேநேரம் சிறந்த துறைசார் தரம் மற்றும் செயற்பாட்டு குறிகாட்டிகளுடன் தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் என செலான் வங்கி முன்னெடுக்கும் பிரயத்தனங்களில் ஓர் அங்கமாக தனது 3600 ஊழியர்களில் 250 பேருக்காக  VRS Scheme  திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

செலான் வங்கியின் பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி கபில ஆரியரத்ன கூறுகையில், ''எமது ஊழியர்களின் தரம் மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை நாம் உயர்வாக மதிப்பிடுகின்றோம். எமது நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழங்குவதற்கு நாம் முயற்சி செய்கின்ற பெறுமதியை பலப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த ஙகீகு  திட்டத்தை நாம் கொண்டுவருகின்றோம். வங்கி கொண்டிருக்க வேண்டிய மிகக் குறைந்தமட்ட தேவைப்பாடுகளை விட மிகச் சிறந்ததொரு, தாராள மனத்துடனான பொதியாகவும் இது அமைகின்றது'' என்றார்.

VRS இற்கு தம்மளவில் தகமையுடையவர்களாக இருக்கும் ஊழியர்களுக்கும் அதேநேரம் வங்கிக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய ஏற்பாடாக இந்த முயற்சி இருக்கின்றது என்று நிதியியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக வங்கி முன்னெடுத்துவரும் புதிய முன்னெடுப்புகள், இலாபம் உழைக்கும் தன்மையை மேலும் முன்னேற்றும் வகையிலமைந்த மிகவும் சாதகமான செயற்பாடுகளை பலப்படுத்தக் கூடியதாக காணப்படும்.

VRS இனை பெற்றுக் கொள்ளும் ஊழியர்கள் ஏக காலத்தில் நல்லதொரு நிதிப் பலத்துடன், வாழ்க்கையை மீண்டுமொரு தடவை மிகச் சரியாக ஆரம்பிக்க முடியுமாகவும் இருக்கும். நிறுவனத்தில் தொடர்ந்தும் பணியாற்றும் ஊழியர்கள் வங்கியின் முழுமையான இலாபத் தன்மை, ஸ்திரநிலை மற்றும் வங்கி என்றவகையில் சந்தையில் அதனது வகிபங்கு போன்றவற்றை பலப்படுத்தக் கூடிய வகையில் மேலும் செயற்திறனுடனும், கட்டமைக்கப்பட்ட முறைமையிலும் வேலை செய்வார்கள்.

''VRS இன் அறிமுகமானது, வங்கியில் தொடராக இடம்பெறும் உபாய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாகும். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பான நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான தொழில்நுட்பத்திலான முதலீடு, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு, தொழிலாளர்களின் தொழில் வளமூட்டல் மற்றும் ஒப்பந்த செயற்பாடு போன்றனவும் இந்த உபாய நடவடிக்கைகளுள் உள்ளடங்குகின்றன. அதேநேரம், ஊழியர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நிறுவனம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ளும்'' என்றும் ஆரியரத்ன கூறினார்.

''கடந்த இரண்டு வருடங்களில் செலான் வங்கியானது மிகப்பெரிய காலடிகளை எடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் எமது புதிய முன்னெடுப்புகள் இத்துறையின் உச்சத்தில் பயணிப்பதற்கும் நிறுவனத்தின் போக்கினை பேணிக் கொள்வதற்கும் எமக்கு உதவும் அதேநேரம், செலான் வங்கியினால் திடசங்கற்பம் பூணப்பட்ட மற்றும் இனங்காணப்பட்ட விடயங்களில் மேலும் வெற்றியை நோக்கி வங்கியைக் கொண்டு செல்லும்'' என்று நாரங்கொட கூறி முடித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .