2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஃபின்லேஸ் நிறுவனத்தின் புதிய அறிவித்தல்

Editorial   / 2018 மே 13 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் உரிமையாண்மையின் கீழ் இயங்கும், இரு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கான உடன்படிக்கையில், ஃபின்லேஸ் கொழும்பு லிமிட்டெட் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  

மேலும், இல.186, வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள தனது காணியை, அபிவிருத்தி செய்வதற்காக, இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும், இந்த உடன்படிக்கையைச் செயற்படுத்துவதற்கு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில், சகல சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்களும், இதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   

இது பற்றி, ஃபின்லேஸ் கொழும்பு முகாமைத்துவ பணிப்பாளரும், தலைமை அதிகாரியுமான ஹன்டர் குரோஃபோர்ட் கருத்துத் தெரிவிக்கையில், “ஜோன் கீல்ஸ் குழுமத்துடன், இணை பங்காண்மை ஒன்றை ஏற்படுத்த, நாம் தயாராகவுள்ளோம்.

இதனூடாக, மிகவும் விறுவிறுப்பான அபிவிருத்தி திட்டமொன்றை, கொழும்பின் மையப்பகுதியில் எம்மால் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். கொழும்பு 2இல் அமைந்துள்ள, அபிவிருத்தி செய்யப்படவுள்ள பகுதி, நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சிக்கான வாய்ப்பை கொண்டுள்ளது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  

“ஃபின்லேஸ் கொழும்பு நிறுவனத்தின், தாய் நிறுவனமான SWIRE குழுமம், உலகின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் அபிவிருத்தி தொடர்பான பதிவுகளைக் கொண்டுள்ளது.

உள்ளுரில் சொத்துக்கள் அபிவிருத்தியில், பெருமளவு அனுபவத்தை கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து செயலாற்றுவதன் காரணமாக, ஃபின்லேஸ் அனுகூலம் பெறும் என்பதில் சந்தேகங்களில்லை.

இந்த இணைந்த செயற்பாடுகள் ஆரம்பித்தவுடன், ஃபின்லேஸ் கொழும்பு லிமிட்டெட் தன்வசம் 39.72% பங்குகளையும், ஜோன் கீல்ஸ் குழுமம் தன்வசம் 60.28% பங்குகளையும் கொண்டிருக்கும்” என்று தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .