Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 20 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய காணி, கட்டட நிர்மாண வியாபாரம் அதிகரித்த சூழலில் அமானா வங்கியின் வீடு, தொடர்மாடிக் கட்டட நிதி வசதியை அநேகமானோர் நாடுகின்றனர்.
வங்கித்துறையில் சிறந்த கட்டணத்துடன் அமானா வங்கி வழங்கும் இந்த நிதித் தீர்வு வாடிக்கையாளர்களுக்கு இலாபகரமானது மாத்திரமன்றி, வழமையான வீடமைப்பு நிதி வசதிகளைவிட மேலான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
சொத்தின் மீதான இலாப நஷ்டங்களை வங்கி பகிர்ந்துகொள்ளுதல், அத்துடன் மேலதிக கட்டணமின்றி தமது நிதியுதவியை முன்கூட்டியே செலுத்தும் திட்டம் என்பன வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு நன்மைகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.
அமானா வங்கியின் இத்தனித்துவமான வசதியின் கீழ், வங்கியானது வாடிக்கையாளருடன் கூட்டுச் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவு செய்யும் அல்லது நிர்மாணிக்கும். அதன் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வங்கியின் பங்கைத் தனக்குச் சொந்தமாக வாங்கிக்கொள்ள வாடிக்கையாளருக்கு வாய்ப்பளிக்கப்படும்.
வங்கியானது வீட்டில் தனக்குள்ள பங்கினை வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடும் என்பதால் வாடிக்கையாளர் ஆரம்பத்திலிருந்தே வீட்டைப் பூரணமாகப் பயன்படுத்தலாம்.
நிதியுதவி அங்கிகாரம் மூன்று தினங்களுக்குள் வழங்கப்படும் அதேவேளை முதல் 2 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த வாடகை வழங்கும் வசதி, 15 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.
வீடு கட்டுவதற்காகக் காணியொன்றை வாங்குதல், பூரணமாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டை, தொடர்மாடிக் கட்டடத்தைக் கொள்வனவு செய்தல், தற்போதுள்ள வீட்டைத் திருத்தியமைத்தல், விரிவுபடுத்துதல், வீடொன்றை வாங்குவதற்கு அல்லது கட்டிக்கொள்வதற்கு ஏற்பட்ட செலவை ஈடுசெய்தல் ஆகியவற்றுக்காக நிதி வசதியைப் பெறும் விருப்பத்தேர்வு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின் பயனைப் பெறுவதற்கு, தற்போதுள்ள வீடமைப்பு நிதியுதவி வசதியொன்றை அமானா வங்கிக்கு மாற்றிக்கொள்வதற்கும் இடமளிக்கப்படும்.
இந்த நிதிவசதி பற்றி அமானா வங்கியின் தனியாருக்கான நிதியுதவிப் பிரிவின் தலைவர் இராமகிருஷ்ணன் கிருபாகரன் கருத்து வெளியிடுகையில், “மிகவும் வசதியானதும் தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்ட எமது வீடு, தொடர்மாடிக் கட்டட நிதி வசதிச் சேவை, எமது வாடிக்கையாளர்களுக்குத் திருப்தியாக வழங்கப்படுவதால், இந்த வசதியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் பிரிவினர், தமக்கென ஒரு சொந்த வீட்டை வசதியான முறையில் பெற்றுக்கொள்ளவும் மேலதிக கட்டணமின்றித் தமது நிதியுதவியை முன்கூட்டியே செலுத்தவும் அமானா வங்கியின் திட்டம் வாய்ப்பளிக்கிறது” என்று கூறினார்.
52 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago