2025 ஜூலை 23, புதன்கிழமை

அரோ விற்பனைத் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு சிங்கப்பூர், இந்திய பயணச்சீட்டுகள்

Editorial   / 2018 மார்ச் 08 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.எல்.ரி.யுதாஜித்  

அரோ விளம்பர நிறுவனத்தினரது ஏற்பாட்டில் கடந்த வருட இறுதியில் நடாத்தப்பட்ட விற்பனைத் திருவிழாவில் பங்குபற்றியவர்களுக்கு சிங்கப்பூர், இந்தியா செல்வதற்கான பயணச்சீட்டுகள் வழங்கும் பரிசுக் குலுக்கல் அண்மையில் அரோ விளம்பர நிறுவனத்தின் அலுவலகத்தில்  நடைபெற்றது.   

இதன்போது சிங்கப்பூர், இந்தியா செல்வதற்கான பயணச்சீட்டுகள் மற்றும் ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டன.  

இந்நிகழ்வில் அரோ விளம்பர நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹபீப் றிபான், முகாமையாளர் எம்.ஐ.எம். றனீஸ், செயற்திட்ட முகாமையாளர் எஸ்.அரசரெட்ணம் மற்றும் ஆலோசகர்களான ஜுனைட் நளிமீ, சட்டத்தரணி எம்.எம்.றம்ஸீன் மற்றும் ஏ.ஐ.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் முகமட் நிஸார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.   

சிங்கப்பூருக்குச் செல்வதற்கான பயணச்சீட்டை ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ப.ஜெயக்குமாரும் இந்தியாவுக்குச் செல்வதற்கான பயணச்சீட்டைக் காத்தான்குடியைச் சேர்ந்த எஸ்.எம்.சக்கீலாவும் வென்றுள்ளனர்.  

அத்துடன் ஆறுதல் பரிசுகளை களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, காவத்தமுனை, நாவற்குடா, ஏறாவூர், தேத்தாத்தீவு, பிறைந்துறைச்சேனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த எட்டுப் பேர் வென்றுள்ளனர். இவர்களுக்கான பரிசில்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரோ விளம்பர நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.   

அரோ விளம்பர நிறுவனமானது கடந்த ஒரு வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து செயற்பட்டு வருகிறது. 

கிழக்கு மாகாணத்தின் கவனத்துக்குச் சென்றடையாத உற்பத்திப் பொருள்கள், சேவைகளை வெளிக்கொணரும் வகையிலும் கிழக்கின் உற்பத்தித்துறைக்கான விளம்பரப்படுத்தல், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் வகையிலும் இந்நிறுவனம் செயற்பட்டு வருகிறது. 

அத்துடன், இவ்வருடம் புதுவருட தினத்தை ஒட்டியதாக விற்பனைத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .