2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அலியான்ஸ் - ஜனசக்தி இணைவு பூர்த்தி

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 2018 பெப்ரவரி மாதத்தில், ஜனசக்தி பொதுக் காப்புறுதி நிறுவனத்தைக் கொள்முதல் செய்திருந்த நிலையில் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் (அலியான்ஸ் லங்கா), தனக்கும் ஜனசக்தி பொதுக் காப்புறுதி நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டிணைப்பு நடவடிக்கைகள், வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

இதன் பிரகாரம், புதிய நிறுவனமானது, தற்போது முதல் ‘அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்’ என்ற பெயரில் தொழிற்படவுள்ளது. இந்நிறுவனம், தனது தலைமை அலுவலகத்தை, இல. 675, கலாநிதி டனிஸ்டர் டி சில்வா மாவத்தை (பேஸ்லைன் வீதி), கொழும்பு - 09 என்ற முகவரிக்கு இடமாற்றியுள்ளது.  

அலியான்ஸ் நிறுவனம், ஜனசக்தி பொதுக் காப்புறுதி நிறுவனத்தை, ரூ. 16.4 பில்லியன் என்ற தொகைக்குக்  கொள்முதல் செய்துள்ளதுடன், அக்காலகட்டத்தில், இலங்கையில் மிகப் பாரிய முதலீடுகளில் ஒன்றாக இது மாறி, சந்தை மீது அலியான்ஸ் கொண்டுள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையின் விளைவாக, இலங்கையில் அலியான்ஸ் கொண்டுள்ள சந்தைப் பிரசன்னம் மாற்றம் கண்டுள்ளதுடன், நிறுவனத்தின் வளர்ச்சியையும் அண்ணளவாக 20% சந்தைப் பங்கையும் ஈட்டிக் கொடுத்துள்ளது. நாடெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கிளைகளில், 2,700க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் பணியாற்றி வருவதுடன், இலங்கை எங்கிலும் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மகத்தான பெறுமதியையும் சௌகரியத்தையும் வழங்குவதற்கு, அலியான்ஸ் லங்கா தற்போது தயாராக உள்ளது.  

கடந்த காலங்களில் இந்நிறுவனம், இலங்கையில் தனது பெரு நிறுவன வாடிக்கையாளர்கள்> பாரியளவிலான செயற்றிட்டங்களுக்கு வழங்கியுள்ள பிரத்தியேகமான காப்புறுதித் தீர்வுகளுக்கு பெயர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .