Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் நிர்வாகமும் ஊழியர்களும் ஒன்றிணைந்து, கொவிட்-19 ஐ சோதிப்பதற்காக உயர் செயல்திறனுடன் நொடிப்பொழுதில் அளவிடும் PCR (RT-qPCR) எனப்படும் ரூபாய் 4 மில்லியன் பெறுமதிமிக்க மருத்துவ இயந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளனர்.
அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கானி சுப்ரமணியம் அவர்கள் கருத்து வெளியிடுகையில்,
“இது போன்ற சவால்மிக்க காலகட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக தனியார் துறை தனது ஒத்துழைப்பையும், முழுமையான ஆதரவையும் வழங்குவது மிக முக்கியமானது. பொதுமக்களுக்கு சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படுவதை உறுதி செய்வதில் ஆயுதப்படைகள் மற்றும் சுகாதார தொழில் சார்ந்தவர்களின் அயராத முயற்சிகளை நாங்கள் போற்றுகிறோம். அவர்களின் முயற்சிகளுக்கு மேலும் உதவுவதற்காக, நோய்த் தொற்றை துல்லியமாகக் கண்டறிந்து அது மேலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய உதவும் நவீன உபகரணங்கள் மற்றும் தீர்வுகள் இருப்பது அவசியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் அர்ப்பணிப்புக் கொண்டுள்ள ஒரு உலகளாவிய காப்புறுதி சேவை வழங்கல் நிறுவனம் என்ற வகையில், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு கொவிட்-19 ஐ சோதிப்பதற்காக உயர் செயல்திறனுடன் நொடிப்பொழுதில் அளவிடும் Pஊசு (சுவு-ஙீஊசு) எனப்படும் மருத்துவ இயந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க உதவியுள்ளமை எமக்கு மிகுந்த கௌரவம் அளிக்கின்றது” என்று குறிப்பிட்டார்.
அலியான்ஸ் லங்கா நிறுவனம் தொடர்பான விபரங்கள்
அலியான்ஸ் லங்கா என்ற ஒருங்கிணைந்த பெயரில் அழைக்கப்படுகின்ற யுடடயைணெ Insurance Lanka Ltd மற்றும் Allianz Life Insurance Lanka Ltd ஆகிய நிறுவனங்கள், காப்புறுதி, சொத்து முகாமைத்துவ வர்த்தகத்தில் உலகளாவில் நிதிச்சேவைகளை வழங்கி வருகின்ற ஜேர்மனி Allianz SE (மூனிச், ஜேர்மனி) நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமாகும். 2005 ஆம் ஆண்டில் ஒரு நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் இயங்க ஆரம்பித்த அலியான்ஸ் லங்கா நிறுவனம், இலங்கையில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற காப்புறுதி சேவை வழங்கல் நிறுவனங்களுள் ஒன்றாக மாற்றம் கண்டுள்ளது. சர்வதேச தொழிற்துறையில் மிகச் சிறந்த நடைமுறைகளை உள்நாட்டு நிபுணத்துவத்துடன் ஒன்றுசேர்த்து வழங்கி வருகின்ற அலியான்ஸ் லங்கா, பல்வேறு உயர் பெறுமதி கொண்ட உள்நாட்;டு உட்கட்டமைப்புச் செயற்திட்டங்களுக்கு காப்புறுதிப் பங்காளராகச் செயற்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பல்வேறு வகையான உற்பத்திகள் மற்றும் சேவைகள் மூலமாக தமது வாடிக்கையாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. பரவலாக கிடைக்கப்பெறுகின்ற உலகத்தரம் வாய்ந்த காப்புறுதித் திட்டங்களை வழங்கி அனைத்து இலங்கை மக்களையும் பாதுகாப்பதை உறுதி செய்வதிலும் நிறுவனம் அளப்பெரும் பங்காற்றி வருகின்றது.
Allianz SE நிறுவனம் தொடர்பான விபரங்கள்
92 மில்லியனுக்கும் மேற்பட்ட தனிநபர், நிறுவன வாடிக்கையாளர்களுடன், உலகில் முன்னணி காப்புறுதியாளர்கள் மற்றும் சொத்து முகாமையாளர்கள் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக அலியான்ஸ் குழுமம் திகழ்ந்து வருகின்றது. கடன் காப்புறுதி, சர்வதேச வர்த்தக காப்புறுதி ஆகியவற்றுக்கு சேவை உதவிகளை வழங்குவதற்காக ஆதனம், ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதிகளை பரந்த வகைப்பட்ட தனிநபர் மற்றும் வர்த்தகக் காப்புறுதி சேவைகள் மூலமாகப் பெற்று அலியான்ஸ் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
உலகில் மிகப் பாரிய முதலீட்டாளர்களுள் ஒன்றாகத் திகழ்கின்ற அலியான்ஸ், தனது காப்புறுதி வாடிக்கையாளர்களின் சார்பில் 650 பில்லியன் யூரோவுக்கு மேற்பட்ட தொகையை நிர்வகித்து வருகின்றது. அதேசமயம், அதனது சொத்து முகாமைத்துவ நிறுவனங்களான யுடடயைணெ Global Investors, PIMCO மேலும் 1.4 ட்ரில்லியன் யூரோ தொகை கொண்ட மூன்றாம் தரப்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன. அதன் வர்த்தக நடைமுறைகள் மற்றும் முதலீட்டு தீர்மானங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அடிப்படையை முறையாக ஒருங்கிணைத்துள்ளதன் பலனாக காப்புறுதி நிறுவனங்களுக்கான Dow Jones பேண் தகைமை சுட்டெண்ணில் அது முன்னிலை வகித்து வருகின்றது. 2018 ஆம் ஆண்டில் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 142,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குழுமத்தின் சார்பில் 130.6 பில்லியன் யூரோ தொகை மொத்த வருமானத்தையும், 11.5 பில்லியன் யூரோ தொழிற்படு மூலதனத்தையும் ஈட்டியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்:
சந்துனி குலதுங்க
முகாமையாளர் - நிறுவன தொடர்பாடல்கள் மற்றும் சந்தை முகாமைத்துவம்
மொபைல்: 1094767990462
sandunikuShallianz.lk
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .