Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முன்வைத்த ‘ஆராதனா’ இசை நிகழ்ச்சி, இலங்கை வங்கியின் அனுசரணையில், ரூபவாஹினியில் ஒளிபரப்பப்படுகின்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால், ஒலிபரப்புச் செய்யப்பட்ட ‘ஆராதனா’ நிகழ்ச்சி, கடந்த 40 ஆண்டுகளாக, இலங்கையின் மெல்லிசை கேட்போரைப் பெரிதும் அணுகச் செய்ததுடன், ஆரம்பம் தொட்டு, அதன் ஏக அனுசரணையாளராக இலங்கை வங்கி விளங்கியது. இந்நிகழ்ச்சியை முழுவதுமாக, புதியதொரு திசைக்குத்திருப்பி, நாடு பூராகவும் வாழும் இரசிகர்கள், இந்நிகழ்ச்சியை, ரூபாவாஹினியில் கண்டு மகிழ்வதற்கு, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் அனுசரணை வழங்கியது.
இதன் முதலாவது இசைக்கச்சேரி, இலங்கை வங்கி கேட்போர் கூடத்தில், பிரபல்யமான இசைக் கலைஞர்களாகிய விக்டர் ரத்நாயக்க, தயாரத்ன ரணதுங்க, சுனில் எதிரிசிங்ஹ, திருமதி. நீலா விக்ரமசிங்ஹ ஆகியோரின் பங்கேற்புடன், பார்வையாளர்களுக்காக முன்வைக்கப்பட்டது. இலங்கை வங்கியின் 79ஆவது ஆண்டு நிறைவையொத்ததாக, ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, தாமரைக் குளம் கேட்போர் கூடத்தில், இரண்டாவது நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது, ரி.எம். ஜயரத்ன, சோமதிலக்க ஜயமஹா, அமரசிறி பீரிஸ் மற்றும் தீபிகா பிரியதர்ஷனி பீரிஸ் போன்ற பிரசித்தி பெற்ற இசைக்கலைஞர்களின் படைப்புகள் முன்வைக்கப்பட்டதுடன், மெல்லிசை இரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரசனையைக் கரசோசமிட்டு, வெளிப்படுத்தினர். இந்நேரடி நிகழ்ச்சி முதலாம் பாகம், கடந்த 31ஆம் திகதி ஒளிபரப்பப்பட்டிருந்தது.
மீதிப் பாகங்கள், செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி, ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நொவம்பர் மாதம் 30ஆம் திகதிகளில், 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago