2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இடிதாங்கிகளுக்கு 25% விலைக்கழிவு தரும் ‘கிளாரியன் இன்டர்நஷனல்’

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல், மே மாதங்கள் மின்னல் பருவ காலமாகும். இக்காலப்பகுதியில் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் தயாரிப்புகளுக்கு, 25 சதவீத விலைக்கழிவுகளை வழங்க கிளாரியன் முன்வந்துள்ளது. உயர்ந்த தரம் வாய்ந்தனவாகவும் ஐரோப்பாவில் 100 சதவீதம் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளாகவும் இவை திகழ்கின்றன.  

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில், மக்கள் பெருமளவில் மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழப்புகளை எதிர்கொள்வதுடன், சொத்துகள், சாதனங்கள் ஆகியவற்றையும் இழக்கின்றனர். இந்தப் பருவ காலத்தை, பொதுவாகச் ‘சித்திரை மின்னல்’ (‘Bak-mah-Akunu’) என அழைக்கின்றனர்.   

பொது மக்கள் மத்தியிலும் சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்கள் மத்தியிலும், மின்னல் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘கிளாரியன் எனர்ஜி’ இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

மே மாதம் 31ஆம் திகதி வரை, 25 சதவீத விலைக்கழிவு சலுகை வழங்கப்படும். இந்த விலைக்கழிவுக்கு மேலாக, உங்களுக்கு Surge பாதுகாப்பு சாதனத்தையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.   

‘கிளாரியன் எனர்ஜி’, HAKEL உடன் கைகோர்த்து, Surge பாதுகாப்பு சாதனங்களை விநியோகிப்பதுடன், ஃபிராங்க்லின் பிரான்ஸ் உடன் கைகோர்த்து இடி தாங்கியை விநியோகிக்கிறது.  

HAKEL Surge பாதுகாப்புச் சாதனங்கள், இலத்திரனியல், மின்சார உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகள், தொலைத்தொடர்பாடல் சாதனங்கள், CCTV கெமரா வலையமைப்புகள், தொலைக்காட்சிகள், கணினிகள் மற்றும் விசேட உபகரணங்களைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளன. 

ஃபிராங்க்லின் பிரான்ஸ் என்பது ஐரோப்பாவில் முதல்தர நிறுவனமாகத் திகழ்வதுடன், கட்டடங்கள்,  இல்லங்களை மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. இவை, இரண்டு தயாரிப்புகளும் 100% ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .