Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 30 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘இந்தியன் சமர் உணவகம்’ சுற்றுலாத்துறை விருது வழங்கும் விழாவில், தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. மேல் மாகாண சுற்றுலா சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழா மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவின் தலைமையில் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
தமது வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, இந்தியன் சமர் உணவகத்தின் பொது முகாமையாளர் சாரத் பஜ்பாய் “மேல் மாகாண சுற்றுலா சபை, எமது நிறுவனத்தை கௌரவித்தமையையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். எம்மை நாடி வரும் சகல வாடிக்கையாளர்களுக்கும் மனதை விட்டு நீங்காத சுவை, நலம் நிறைந்த இனிய அனுபவமொன்றை வழங்கும் பொருட்டு, நாம் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். எமக்குக் கிடைத்த இத்தங்கப் பதக்க விருது அதை உறுதிப்படுத்துகிறது” என்றார்.
கொழும்பு 07, ஹோர்ட்ன் பிளேசில் அமைந்துள்ள சமர் உணவகம், சுவைமிக்க உணவுகளைப் பரிமாறுவதில் புகழ் பெற்று விளங்குகிறது. மாறுபட்ட சுவையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு அறுசுவை உணவுகளை இந்தியன் சமர் உணவகம் கொண்டுள்ளது. ஹலால் உணவுகளுடன் சைவ உணவுகளையும் வழங்கும் இந்தியன் சமர் உணவகம், மதுபான விற்பனை, பாவனையற்ற உணவகமாகும்.
இந்தியன் சமர் உணவகத்தில் சமையல் நிபுணர்கள், சமைப்பதற்கு பயன்படுத்தும் சகல பொருட்களும் தரமாக உள்ளனவா என்பதில் அதிக கவனம் செலுத்துவதோடு, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்துக்கேற்ற பெறுமதியோடு, மேம்பட்ட தரமும் சிறந்தசுவையும் நிறைந்த உணவுகளை வழங்குவதையே தமது நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .