2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்ற மொபிடெல் Cash Bonanza - களியாட்ட விழா

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் (வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால்) மொபிடெல் Cash Bonanza களியாட்ட நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பொது மக்கள் அனுபவித்து மகிழும் வகையில் இசை நிகழ்ச்சி மற்றும் bungee jumping சித்திர போட்டிகள், IOT பயிட்சிப்பட்டறைகள், சிறுவர் விளையாட்டு பகுதி, மொபிடெல் சேவைகள் அளிக்கும் சிறு கடைத்தொகுதிகள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் மற்றும் கேமிங் வலயமானது, உயர் துரித 4G இணைப்பினால் வலுப்படுத்தப்பட்ட அதேவேளை அழகு கலாசார மையம் மற்றும் பற்சிகிச்சை மையம் ஆகியனவும் அமைந்திருந்தன.

மொபிடெல் உபஹார திட்டத்தின் கீழ் சிரேஷ்ட பிரஜைகளின் நலன்கருதி ஒழுங்கு செய்யப்பட்ட கண் கிளினிக் இடம்பெற்றது. இந்த விசேட கண் கிளினிக் ஆனது புகழ்பெற்ற கண் சத்திரசிகிச்சை நிபுணர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. சிரேஷ்ட பிரஜைகளுக்கு அனுகூலமளிக்கும் வகையில் 1000 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.  

பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர்களான சத்யபிரகாஷ் மற்றும் ரீட்டா இருவரும் இந்த நிகழ்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். பிரபலமான பாடல்களான ஆழப்போறான் தமிழன் (மெர்சல்), ராசாளி (அச்சம் என்பது மடமையடா), ஒன்ன விட்டா யாரும் (சீமராஜா) போன்ற பாடல்களை சத்யபிரகாஷும், வாடா மாப்பிளை (வில்லு), அலேக்ரா (கந்தசாமி), மொளகாப் பொடி (சாமி2) போன்ற பாடல்களை ரீட்டாவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.  
இவர்களுடன் இணைந்து நம் நாட்டுப்பாடகர்களான நவகம்புர கணேஷ், சமீரா ஹசன், ரகுநாதன் மற்றும் ஸ்டான்லி அனைவரும் பாடி மகிழ்வித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .