2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவிலிருந்து பரிஸுக்கு KWID

Gavitha   / 2017 ஜனவரி 18 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் டெல்லி நகரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, 45 நாட்களாக தனது பயணத்தைத் தொடர்ந்து பாரிஸ் நகரை ரெனோல்ட் KWID சென்றடைந்திருந்தது. கடுமையான மழை, வெள்ளம், பனிப்பொழிவு மற்றும் ஒழுங்கான வீதிகள் இன்றிய பகுதிகளினூடாக இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்தப் பயணத்தின் போது, சில பகுதிகளில் வெப்பநிலை -25 பாகை செல்சியஸை விட குறைவாகப் பதிவாகியிருந்த போதிலும், அந்த காலநிலை மாற்றத்தினால் வாகனத்தின் பயணத்துக்கு எவ்வித தடங்கல்களும் ஏற்பட்டிருக்கவில்லை.  

இந்த வெற்றிகரமானாப் பயணத்தின் மூலமாக, KWID வாகனத்தின் செயல்திறன் தொடர்பில் சந்தையில் பரவலாகக் காணப்பட்ட சந்தேகங்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக்கான உத்வேகம் எனும் தொனிப்பொருளுக்கமைய, ரெனோல்ட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்த KWID வாகனமும் அந்த தொனிப்பொருளின் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஒரு வாகனமாக அமைந்துள்ளது என, நிறுவனத்தின் சார்பாக உரையாற்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்தியாவில் ஆரம்பித்து, மியன்மார் ஊடாக, சீனாவில் பிரவேசித்த இந்த KWID பயணம், அதனைத்தொடர்ந்து ரஷ்யா ஊடாக லத்வியா, பேர்ளின் ஆகிய நகரங்களைக் கடந்து பரிஸை சென்றடைந்திருந்தது. 

இந்தியாவில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டிருந்த போதிலும், 13 நாடுகளினூடாக இந்தப் பயணத்தைத் தொடர்ச்சியாகத் தொடர்ந்திருந்த போது,வெவ்வேறு நாடுகளில் நிலவிய வெப்பதட்ப சூழ்நிலைகள் மற்றும் வீதி அமைப்புகள் போன்றவற்றில் KWID பயணித்திருந்ததன் மூலமாக ரெனோல்ட் தன்னகத்தே கொண்டுள்ள சர்வதேச புகழ்பெற்ற உற்பத்திச் சிறப்புகள் இந்தக் காரிலும் உள்வாங்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக, மொஸ்கோ போன்ற நகரங்களில் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை நிலவியிருந்தப் போதிலும், அதன் மூலமாக எவ்வித பாதிப்புகளும் காருக்கோ அல்லது இந்தப் பயணத்துக்கோ ஏற்பட்டிருக்கவில்லை.  

சர்வதேச ரீதியில் இந்த கார் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட வண்ணமுள்ளது. நேபாளம், இலங்கை மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும், சமீபத்தில் தென்னாபிரிக்காவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த காரை பிரேசில் நாட்டில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.   

சிறியளவிலான கார் ஒன்றை இந்தளவு தூரம் வெவ்வேறான காலநிலைகள் மற்றும் சூழ்நிலைகள் போன்றவற்றில் பயணிப்பதற்கு பயன்படுத்தியிருந்ததன் மூலமாக அதன் திறன் மற்றும் தரம் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X