2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த பெல் ரக ஹெலிகொப்டரும் இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று (20) பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது. 

குறித்த கட்டிடத்தின் 3வது மாடியிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை அறிவித்துள்ளது. R.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X