Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 25, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 10 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
The Asian Banker சஞ்சிகையின் தாய் நிறுவனமான TAB Global இன் உலகளாவிய ஆய்வு மற்றும் ஆலோசனை துணை நிறுவனமான TAB இன்சைட்ஸ் ஆண்டுதோறும் வெளியிடும் மதிப்புமிக்க உலகளாவிய தரவரிசையில் கொமர்ஷல் வங்கி இலங்கையின் வலிமையான வங்கியாக மீண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வலுவான வங்கிகள் தரவரிசையானது விரிவான மற்றும் வெளிப்படையான மதிப்பெண் அட்டையை அடிப்படையாகக் கொண்டது, இது வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களை இருப்புநிலை செயல்திறனின் 14 விசேட பிரதான பெறுபேறுகளை உள்ளடக்கிய நிலையில் அளவிடும் திறன், இருப்புநிலை வளர்ச்சி, இடர் விவரக்குறிப்பு, இலாபம், சொத்து தரம் மற்றும் பணப்புழக்கம் ஆகிய ஆறு அளவுகோல்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு சனத் மனதுங்க குறிப்பிடுகையில், —வலிமையான வங்கிக்கான மதிப்பீடானது கடுமையான விதிகளுக்கு உட்பட்டதும் விசாலமானதுமாகும்.' —இது வங்கிகள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு நம்பகமான அளவுகோலாக அமைகிறது. TAB இன்சைட்ஸினால் இலங்கையின் வலிமையான வங்கியாக தரவரிசைப் படுத்தப்பட்டிருப்பது கொமர்ஷல் வங்கி குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மிகவும் பெருமைக்குரியதாகும், ஏனெனில் நாங்கள் சேவை செய்யும் சமூகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர் குழுக்களுக்கான எங்கள் கடமைகளை நிறைவேற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம்.'
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அந்தந்த நாடுகளில் உள்ள வலுவான வங்கிகளாக 2024 ஆம் ஆண்டு வலிமைக் குறியீட்டில் கொமர்ஷல் வங்கியுடன் ANZ குழுமம் (அவுஸ்திரேலியா), சீனா வர்த்தக வங்கி (சீனா), கோடக் மஹிந்திரா வங்கி (இந்தியா), மீசான் வங்கி (பாகிஸ்தான்), OCBC வங்கி (சிங்கப்பூர்), சுமிடோமோ மிட்சுய் நிதிக் குழு (ஜப்பான்), மண்டிரி வங்கி (இந்தோனேசியா) மற்றும் பொது வங்கி (மலேசியா) ஆகியன தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும், மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. மற்றும் இலங்கையின் முதல் 100மூ கார்பன்நடுநிலைமை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச வலையமைப்பைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 வங்கிக்கிளைகள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான முதற்தர வங்கி ஆகியவையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
9 hours ago