2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

“இலங்கையில் AI புரட்சியை ஏற்படுத்த ஒன்றுபடுவோம்”

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்காது செயற்கை நுண்ணறிவை (AI) எமது சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து ஸ்ரீலங்கா மொபிட்டெல் மற்றும் இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம்  ஏற்பாடு செய்துள்ள தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு -2025 (National AI Expo & Conference -2025) எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் மாநாடு ஒன்று இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (12) அன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கூறியுள்ளதாவது,

இலங்கையை பொறுத்தவரையில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மிகவும் அவசியமானது. செயற்கை நுண்ணறிவு எமது கையடக்கத் தொலைபேசிகளில், இணைத்தளங்களில் மட்டுமல்ல, எமது அன்றாட வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறியுள்ளது. உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழிற்துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதாரங்களையும் வலுப்படுத்தி வருகின்றது. 

இந்த செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில், இலங்கை பின்னடைவில் ஒள்ளது. இந்தியாவில் 57 % வீதமான அரச சேவைகளும் சிங்கப்பூரில் 90 வீதமான அரச சேவைகளும் செயற்கை நுண்ணறிவை (AI) ஈடுபடுத்துகின்றன. அத்துடன், வியட்நாமும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்து.

இந்த நிலையில், இலங்கையர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்காது செயற்கை நுண்ணறிவை (AI) எமது சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு -2025 ( National AI Expo & Conference -2025 ) என்பது எமது நாட்டுக்கு ஒரு  பாரிய பற்களிப்ளை ஏற்படுத்தவுள்ளது.

இந்த கண்காட்சியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) வல்லுநர்கள், தொழிற்றுறையினர், கல்விமான்கள், கண்டுபிடிப்பாளர்கள், கலந்துகொள்ள உள்ளனர்.

ஒவ்வொரு இலங்கையருக்கும் அதாவது, விவசாயி முதல் கொழும்பிலுள்ள தொழில் முயற்சியாளர் வரை செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படும்.

செயற்கை நுண்ணறிவு (AI) வியடயத்தில் அரசாங்கம் ஏற்கெனவே முன்னோக்கிச் செல்கின்றது. 

நாம் தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) மூலோபயத்திட்டத்தை வெளியிட்டுள்ளோம். 

அது தற்போது மக்களின் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. நெறிமுறை, நிலைபேண்தகு செயற்பாடு போற்றவற்றை செயற்கை நுண்ணறிவு ( AI ) உள்ளடக்கியுள்ளதை நாங்கள் உறுதி செய்கின்றோம். 

நாட்டில் விவசாயம், சுகாதாரத்துறை, கல்வி மற்றும் போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவை (AI) விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பில் மக்களுக்கு தேவையான அறிவுகளை வழங்கவுள்ளோம். 

அதாவது, பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பில் கற்பிக்கவுள்ளோம். தற்போது கடமைகளில் ஈடுபடுவோருக்கு பல்வேறு செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த சந்தர்ப்பங்களை உருவாக்கவுள்ளோம். 

இதனால் எமது தொழிற்துறைகளும் பொருளாதாரமும் வலுப்பெறுவதுடன், உறுதியடையும். அத்துடன் எமது இளைஞர்களுக்கும் எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் பல சந்தர்ப்பங்கள் உருவாகும்.  
செயற்கை நுண்ணறிவில் (AI) புரட்சியை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார்.

இந் நிகல்வில் , இலங்கை தொலைத்தொடர்பு (SLT) தலைவர் டாக்டர் மோதிலால் டி சில்வா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .