Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 20 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்றாவது வருடமாக இலங்கையின் சிறந்த இணையத்தள வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ‘குளோபல் பாங்கிங் அன்ட் பினான்ஸ் றிவீவ் சஞ்சிகை’யால் இந்தத் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தனது வாடிக்கையாளர்களுக்கு, இணையவழி ஊடாகவும் டிஜிட்டல் தளம் ஊடாகவும் ஆக்கபூர்வமான அதி உயர் சேவைகளை வழங்கும் உலகளாவிய நிதிச் சமூகத்தோடு, தொடர்புடைய வங்கிகளை அங்கிகரிக்கும் வகையில், கீர்த்திமிக்க இந்தச் சஞ்சிகை, இந்த விருதை அறிமுகம் செய்தது.
வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.ரெங்கநாதன் கூறும்போது, “கொமர்ஷல் வங்கி, இணைய வழி ஊடாகவும் ஏனைய டிஜிட்டல் அலைவரிசைகள் வழியாகவும் மாற்றங்களைக் கொண்டு வரும், ஆக்கபூர்வ வங்கிச் சேவைகளை வழங்குவதில், அத்தகைய சேவைகளை அபிவிருத்தி செய்வதில் முன்னணி வகிக்கின்றது. இதனால் கணிசமான செயலாக்கத்தை மேம்படுத்தி உள்ளதோடு, எமது இணைய வழிச் சேவைகளை, உரிய முறையில் செயற்படுத்தி, இந்த முக்கிய விருதை வென்றுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.
2017 இறுதியில், கொமர்ஷல் வங்கியின் இணைய வழிப் பரிமாற்றம் 663 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இலங்கையில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கொடுப்பனவு மேடையாகவும் இது மாறியுள்ளது.
அதிகளவான மக்கள் பங்களிப்புச் செய்யும் இலங்கையின் இணைய வழிக் கொடுப்பனவுக் கட்டமைப்பான கொமர்ஷல் வங்கியின் இணையப் பக்கம், தனியார் வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாண்மைப் பிரிவினருக்கும் பல்வேறு விதமான வசதிகளை வழங்குகின்றது.
தனியார் இணைய வழி வங்கி மேடையானது, பல்வேறு கணக்குகளுக்குப் பணப்பரிமாற்றம், இணைய வழி நாணயப் பரிமாற்றம், தொலைபேசி, மின்சாரம், கடனட்டை, காப்புறுதிச் சந்தா, கல்விச் சேவைகள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு, விமான டிக்கட் கொள்வனவு என்பன உட்பட 65 நிறுவனங்களுக்கான கொடுப்பனவுச் சேவைகள் எனப் பல தெரிவுகளை வழங்குகின்றது.
தனியார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கும் வாடிக்கையாளர்கள் இதன் ஊடாக விண்ணப்பிக்கலாம். நிலையான வைப்புகள், திறைசேரி முறிகள் மீதான முதலீடுகள், பங்குச் சந்தைக் கொடுப்பனவுகள் என்பனவற்றையும் இந்த இணைய வழிச் சேவை ஊடாக, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025