S.Sekar / 2022 மே 11 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட Global Business Review சஞ்சிகையின் வருடாந்த விருதுகளில் 'சிறந்த சில்லறை வங்கி இலங்கை 2022' மற்றும் 'சிறந்த கூட்டாண்மை வங்கி 2022' ஆகிய விருதுகளை கொமர்ஷல் வங்கி வென்றுள்ளது.

2021 இல் அதன் செயல்திறனை மதிப்பாய்வு செய்த ஒரு சுயாதீன ஆய்வுக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் வங்கிக்கு இந்தப் பாராட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட ஆண்டில் கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் தரப்படுத்தல் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கியாகத் திகழ்ந்தது. நாட்டில் உள்ள தனியார் வங்கிகளில் துறை சார்ந்த முன்னணி செயல்திறன் குறிகாட்டிகள் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் அதிக சந்தை மூலதனம், அதிக மொத்த வருமானம், வரிக்கு முந்திய மற்றும் பின்னரான அதிக லாபம், மொத்த சொத்துக்களில் அதிக மதிப்பு, மொத்த கடன்களில் அதிக மதிப்பு, கடன்களின் அதிக சந்தை பங்கு, அதிக மொத்த பங்குதாரர் நிதி, அதிக செயல்பாட்டு வருமானம், அதிகபட்ச மொத்த வைப்பு, அதிக நிலையான வைப்புக்களின் சந்தை பங்கு, மற்றும் அதிக CASA விகிதம் ஆகியன மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
குளோபல் பிசினஸ் ரிவியூ சஞ்சிகையின்; விருதுகள் என்பது வங்கி, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், தலைமைத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களின் அசாதாரண செயல்திறனைக் கௌரவிப்பதற்கும் விருதுகளில் அளிப்பதற்குமான ஒரு தளமாகும். குளோபல் பிசினஸ் ரிவியூ என்பது ஒரு ஒன்லைன் சஞ்சிகையாகும், இது உலகம் முழுவதும் உள்ள தொழில்களில் இருந்து செய்திகள், அம்சங்கள், பகுப்பாய்வு, வர்ணனைகள் மற்றும் நேர்காணல்களை வழங்குகிறது.
8 hours ago
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
28 Oct 2025
28 Oct 2025