S.Sekar / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி ஐக்கிய இராச்சியத்தின் பட்டய காப்புறுதி நிறுவனத்தின் இலங்கை பிரிவாக செயற்படும் இலங்கை காப்புறுதி நிறுவனத்துடன் (SLII) இணைந்து அதன் உறுப்பினர்களுக்கு தமது தொழில்சார் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விசேட கல்விக் கடன் உதவி மற்றும் இலகு கொடுப்பனவுத் திட்டம் போன்றவற்றை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

SLII மாணவர்களுக்கு கொமர்ஷல் வங்கி வழங்கும் சலுகைகள் அந்த நிறுவனத்தின் கற்கைகளுக்கான கட்டணத்தில் 90 சதவீதத்தை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த வட்டியிலான கடன் திட்டம், வட்டியற்ற இலகு தவணைக் கொடுப்பனவுகளுக்கு வசதியான கிரடிட் கார்ட் என்பனவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த கிரடிட் கார்ட் இலகு கொடுப்பனவுத் திட்டங்களுக்காக, வங்கிக் கட்டணங்கள் மற்றும் தரகுக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என வங்கி அறிவித்துள்ளது.
விசேட கல்விக் கடன் திட்டம் மற்றும் இலகு கொடுப்பனவுத் திட்டம் என்பன ஐக்கிய இராச்சியத்தின் பட்டயக் காப்புறுதி நிறுவனத்தோடு இணைந்த 'காப்புறுதி சான்றிதழ்' கற்கை, 'காப்புறுதி டிப்ளோமா கற்கை' என்பனவற்றுக்கு வழங்கப்படும். கிரடிட் கார்ட்கள் மூலம் தொழில்சார் பரீட்சைகளுக்கான நுழைவு மட்டக் கொடுப்பனவு, SLII வழங்கும் அடிப்படை கற்கை மற்றும் டிப்ளோமா கற்கை என்பனவற்றுக்கான கொடுப்பனவுகளையும் வழங்க முடியும் என வங்கி அறிவித்துள்ளது.
வங்கிக்கும் SLII க்கும் இடையிலான இந்தப் பங்குடைமை பற்றிக் குறிப்பிட்ட வங்கியின் குழும பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி ஹஸ்ரத் முனசிங்க 'கொமர்ஷல் வங்கி எப்போதுமே தனது வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளது. SLII உடனான இந்தப் புதிய நிதி உதவிப் பங்குடைமை மூலம் இலங்கையின் காப்புறுதித் துறையில் தொழிற்சார் கற்கைக்கும் கைகொடுக்கவுள்ளது. தொழிற்சார் அபிவிருத்திகளுக்கு உதவுவது மட்டுமன்றி அந்தத் துறையின் தொழிற்சார் ஆற்றல் அபிவிருத்திக்கும் உதவுவது இதன் நோக்கமாகும்' என்று கூறினார்.
கடந்த ஆண்டிலும் இதுபோன்ற பங்குடைமையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் கொமர்ஷல் வங்கி இணைந்தது. அதன் பட்டப்பின்படிப்பு ஆய்வுத்துறை மாணவர்களின் கல்விக்கு உதவுவதே இந்தத் திட்டமாகும். முன்னுரிமை வட்டி வீதத்தின் அடிப்படையில் ஏனைய சலுகைகளுடன் இந்த உதவி வழங்கப்படுகின்றது.
2 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Jan 2026