Editorial / 2017 ஜூலை 19 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக, துமிந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதலீட்டுச் சபையில், முன்னர் பணிப்பாளராக இருந்தார். இந்நிலையில், தற்போது, தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முதலீட்டுச் சபைக்கு, மேலும் இரண்டு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜோன்கீல்ஸ் குழும நிறுவனத்தின் பிரதித் தலைவர் அஜித் குணவர்தன, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாக மற்றும் கொழும்பு டொக்யார்ட் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள பீ.பி யாப்பா ஆகிய இருவமே, புதிய பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை காலமும் தலைவராக இருந்த உபுல் ஜயசூரிய, கடந்த 13ஆம் திகதி இராஜினாமா செய்துள்ள நிலையிலேயே, ஜனாதிபதியால், முதலீட்டுச் சபைத் தலைவராக, ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago
2 hours ago