2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் கிளைகளை ஆரம்பிக்க வெளிநாட்டு வங்கிகள் ஆர்வம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கிளைகளை ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு வங்கிகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும், இக் கோரிக்கைகளை இலங்கை மத்திய வங்கி பரிசீலனை செய்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   

ஐந்து வெளிநாட்டு வங்கிகள் இலங்கையில் தமது கிளைகளை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதில் இரு மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கும், ஒரு இந்திய வங்கிக்கும் அனுமதி வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.   

இலங்கையில் இந்த வங்கிகள் தமது கிளைகளை ஆரம்பிப்பதற்கு காணப்படும் தேவைகள் குறித்து நாம் கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக இலங்கையில் தற்போது 12 வெளிநாட்டு வங்கிகள் இயங்கி வருகின்றன. இவை மொத்த சந்தையில் 10சதவீதத்தை தம்வசம் கொண்டுள்ளன. எனவே, நாம் வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுமதி வழங்கி இந்தப் பிரிவை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை.   

ஆசிய வங்கிகள் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டுள்ளதுடன், ஒரு சீன வங்கியும் இலங்கையில் தனது கிளையை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளியிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X