Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 30 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு சுபீட்சமான, தூய்மையான, சூழல் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், வலு நிதியங்கள், நிதிசார் நிறுவனங்கள் மற்றும் குடும்ப அலுவலகங்கள் மற்றும் ஆர்வமுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் லோட்டஸ் (ரினியுவபிள்) எனர்ஜி பிரைவெட் லிமிட்டெட் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
சூழலுக்குப் பாதுகாப்பான வலு நிறுவனம் எனும் வகையில், லோட்டஸ் 2022 இல், இலங்கையின் வலுப் பிறப்பாக்கலில் 5% பங்களிப்பை வழங்கவும், 2030 அளவில் 10% வரை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. லோட்டஸ் இந்த இலக்கை எய்துவதற்கு 20 பில்லியன் ரூபாய் தேவையாகக் கொண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க வலு துறையில் முதலீடுகளை மேற்கொள்ள லோட்டஸ் திட்டமிட்டுள்ளது. பாரம்பரிய படிம எரிபொருளில் தங்கியிருக்கும் பொருளாதாரங்களைப் புதுப்பிக்கத்தக்க வலு புத்தாக்கத்துக்கு மாற்றிக்கொள்வதற்கு, மக்களின் புத்தாக்கமான சிந்தனைகளை வரவேற்றுள்ளது.
லோட்டஸ் ஹைட்ரோ பவர் பிஎல்சியின் (முன்னர் பிரவுண்ஸ் ஹைட்ரோ பவர் பிஎல்சி என அழைக்கப்பட்டது) புதிய தலைவர் கரி சேட்டன் கருத்துத் தெரிவிக்கையில், “பாரம்பரிய படிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு மாற்றமடைவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக எமது நீர், வளி, நிலம் மற்றும் கடல்களைப் பாதுகாத்துக்கொள்ளவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பூமியில் உயரினங்களுக்கு இது உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.
“நாம் வலுவான, வலுச்செறிவான, புத்தாக்கமான செயற்பாட்டை முன்னெடுப்பதுடன், சூழலுக்கு பாதுகாப்பான உலகை கவனத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றோம். இது இலங்கையையும் தூய்மையான மற்றும் வலுச்சிக்கனமான எதிர்காலத்துக்கு கொண்டு செல்ல உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.
சூழல் பாதுகாப்பு தொடர்பில் கம்பனி நம்பிக்கை் கொண்டுள்ளதுடன், பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது என்பதில் தாம் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் செயற்பாடுகளைக் கொண்டுள்ள லோட்டஸ், இலங்கையின் வலுப்பிறப்பாக்கல் துறையில் தனது வியாபாரச் செயற்பாடுகளை விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளது.
லோட்டஸ் ரினியுவபிள் எனர்ஜி பிரைவெட் லிமிட்டெட் நிறைவேற்று அதிகாரமில்லாத பணிப்பாளர் கௌரி சங்கர்
கருத்துத்தெரிவிக்கையில், “துறையினால் ஏற்படுத்தப்படும் சூழல் மாசுபடுத்தல்களுக்கு எதிராக கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் முன்வந்து செயலாற்ற வேண்டியது எம்போன்ற நிறுவனங்களின் கடமையாகும்” என்றார்.
இலங்கையில் வலுப் பிறப்பாக்கல் தொடர்பில் நிறுவனத்தின் செயற்பாடுகளில், இலங்கையில் காணப்படும் வலு விநியோக
நிறுவனங்களைக் கொள்வனவு செய்வதாக அமைந்துள்ளது. “பிரவுண்ஸ் ஹைட்ரோ பவர் செயற்பாடுகளை நாம் கையகப்படுத்தியுள்ளோம், இதன் மூலமாக இலங்கையில் சந்தைப்பிரசன்னத்தை நாம் விரிவுபடுத்த எண்ணியுள்ளோம். நிறுவனம் தூய்மையான மற்றும் சூழலுக்குப் பாதுகாப்பான வலு என்பதில் பெருமளவில் தங்கியுள்ளது” என லோட்டஸ் பணிப்பாளர் மேனக அதுகொரள தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .