2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் வேலையற்றோர் தொகை சரிவு

Gavitha   / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் வேலையற்றிருப்போரின் எண்ணிக்கை, 4.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்து, 349,686ஆகப் பதிவாகியிருந்ததாக, தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில் இந்தத் தொகை, 4.6 சதவீதமாகப் பதிவாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டில் பணிபுரிந்தோரின் எண்ணிக்கை, 8.3 மில்லியனாகக் காணப்பட்டதாகவும் இதில், 63.3 சதவீதமானவர்கள் ஆண்களென்பதும் ஏனையோர், பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

பொருளாதார ரீதியில் எவ்வித பங்களிப்பும் வழங்காமல் காணப்பட்டோரில் 24.2 சதவீமானவர்கள், ஆண்கள் என்பதுடன், 75.8 சதவீதமானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2016இல், 45.5 சதவீதமானவர்கள், சேவைத்துறையில் பணியாற்றியிருந்ததுடன், 26 சதவீதமானவர்கள், தொழிற்றுறையில் பணியாற்றியிருந்தனர். 28.5 சதவீதமானவர்கள் விவசாயத்துறையிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X