2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் Hidromek அறிமுகம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் “Hidrome” நிர்மாண சாதனங்களை உதேஷி ட்ரக்ஸ் அன்ட் இக்யுப்மன்ட் பிரைவட் லிமிட்டெட் (Utrax®) அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்வு கிரிபத்கொட பகுதியில் அமைந்துள்ள “உதேஷி சிட்டி” வளாகத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக நிகழ்வில், இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் டுன்கா ஒஸ்குஹாடர் பங்கேற்றிருந்தார்.   

இந்த அறிமுக நிகழ்வில்,துருக்கியின் முன்னணி நிர்மாண சாதன வர்த்தக நாமமான “Hidromek” இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு காணப்படும் உயர் தரம் வாய்ந்த தெரிவாக அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதை வென்ற அலங்காரத்துடன், நவீன தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்களவு முதலீடுகளையும் கொண்டுள்ள “Hidromek” துருக்கியின் உள்நாட்டுச் சந்தையில் துரித வளர்ச்சியைப் பதிவு செய்து, சர்வதேச தரம் வாய்ந்த நிர்மாண சாதனமாக உயர்ந்துள்ளது.

  உதேஷி குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுபுன் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “துருக்கியில் காணப்படும் தொழிற்பேட்டைகளில் உள்ள சகல வசதிகளையும் படைத்த தொழிற்சாலைகளில் இந்தச் சாதனங்கள் முழுமையாகப்பொருத்தப்படுகின்றன. இலங்கையில் தற்போது காணப்படும் இது போன்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பாகச் செயலாற்றக்கூடியது. இலங்கைச் சந்தையில் இவற்றை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் காணப்படும் ஐரோப்பிய உற்பத்தியாக இது மட்டுமே காணப்படுகிறது. நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய நிறுவனம் எனும் வகையில், துறையின் தேவைகளை நாம் நன்குணர்ந்துள்ளோம். இந்தத் தேவைகளை நிவர்த்தி செய்ய சிறந்த தயாரிப்புகளைத் தெரிவு செய்துள்ளோம்” என்றார்.   

backhoe loaders, mini backhoe loaders, wheel excavators மற்றும் wheel loaders போன்றவற்றை நில அகழ்வு செயற்பாடுகள் மற்றும் வீதி நிர்மாண செயற்பாடுகளுக்காக “Hidromek” தயாரிப்புகளை விற்பனை செய்வதுக்கான அங்கிகாரத்தை Utrax® கொண்டுள்ளது. நிர்மாணத்துறையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது, இந்த புதிய தயாரிப்புகளை உள்நாட்டில் அறிமுகம் செய்வதுக்கு  நிறுவனத்துக்கு பிரதான உந்துசக்தியாக அமைந்திருந்தது.

எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற மேலும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யத்திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்த பெரேரா, “துறையின் மீது முதலீட்டாளர்கள் பெரும் ஈடுபாட்டைக்கொண்டுள்ளனர். மேலும் பல திட்டங்களுக்கு உதவிகளை வழங்க நாம் தயாராகவுள்ளோம். இந்நிலையில் எம்மால் Hidromek’ஐ இதைவிட சிறந்த காலப்பகுதியில் அறிமுகம் செய்திருக்க முடியாது. எம்மீது நம்பிக்கை கொண்டு கைகோர்த்து, முதலாவது பதிவை மேற்கொண்டுள்ள சன் கொன்ஸ்ட்ரக்ஷனுக்கு நாம் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X