2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் IBMஇன் Cloud தீர்வுகள் அறிமுகம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

IBM இன் ஒன்றிணைக்கப்பட்ட அறிவுத்திறன் வாய்ந்த Cloud தீர்வுகளை இலங்கையின் பெரிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற IBM இன் வியாபார இணைப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக இந்த அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெறுபேறுகளை மாற்றியமைப்பதில் அறிவுத்திறன் வாய்ந்தக் கட்டமைப்புகள் எவ்வாறானப் பங்களிப்புகளை வழங்குகின்றன என்பது தொடர்பில் ஆராயும் வகையில் அமைந்திருந்ததுடன், தொழில்நுட்ப புத்தாக்கத்தின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் உதவியாக அமைந்திருந்தது.

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், உலகில் நாளாந்தம் 25 quintillion bytes தரவுகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவைக் கட்டமைக்கப்படாதவை என்பதுடன், கணினிகளில் தென்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அறிவுத்திறன் வாய்ந்தக் கணினியியல் என்பது கட்டமைப்புகளில் புதிய உலகத்தரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன்,கட்டமைக்கப்படாத தரவுகளைப் புரிந்துகொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது.

IBM Watson என்பது வணிக ரீதியில் காணப்படும் முதலாவது கணினி சார் அறிவுத்திறன் வாய்ந்த முறைமையாக அமைந்துள்ளது. வௌ;வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு பரிபூரணமான உள்ளார்ந்த தரவுகள் மற்றும் நேரத்தின் மீதான பெறுமதிகள் போன்ற விடயங்களைப் பெற்றுக் கொள்வதுக்கு உதவியாக இந்த முறை அமைந்துள்ளது.

தற்போது Watson APIகள் மற்றும் சேவைகளை, IBM Cloud கட்டமைப்பில் வழங்க Watson முன்வந்துள்ளது. இது, இலங்கையின் வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் என அனைவருக்கும் உதவியாக உள்ளது. இவர்களுக்கு இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த கணினி கட்டமைப்பை இலகுவாக அணுகக்கூடியதாக அமைந்திருக்கும்.

Watson API இன் மூலமாக அப்ளிகேஷன்களுக்கு சமூக ஊடகங்கள், வியாபார தரவுகள் அல்லது ஏனைய டிஜிட்டல் தொடர்பாடல்களிலிருந்து உள்ளக விவரங்களை பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். நபர் மற்றும் சமூகத் தன்மைகளை ஆராய்ந்தறிவதுக்கு உதவியாக இச் சேவை மொழிசார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.Watson Developer மூலமாக அறிவுத்திறன் வாய்ந்த appfis, அபிவிருத்தி, பயிற்சி, பரிசோதனை மற்றும் சூழல் உறுதிப்படுத்தல்களை வியாபாரங்களுக்கு ஏற்படுத்துக்கு உதவியாக அமைந்திருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X