Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
சிறப்பான வளங்கள் பொருந்திய மட்டக்களப்பில் உல்லாசப் பயணிகள் விருப்புடன் பயன்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையினை உருவாக்க வேண்டும். அதன் மூலம் இம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கடந்தவாரம் ஆரம்பமான சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலாத்துறை நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் சிறந்த வளஙகளைக் கொண்ட மாவட்டமாகும். இதனை இரண்டு விடயங்களின் ஊடாகப் பயன்படுத்த நினைக்கின்றோம். இந்த வளங்களைப் பாதுகாப்பது. அதே நேரத்தில் இதனூடாக எப்படி இங்குள்ள மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவது.
இது நுணுக்கமானதொரு விடயம். இதனைப் சரியான புலமைத்துவத்தோடும், அறிவோடும் அடிப்படைக் கருத்தியலோடும் கொண்டு செல்ல வேண்டும். அந்த வகையில் தான் சுற்றுலாத்துறை என்பது மாவட்டத்தின் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்துக்கு மட்டுப்படுத்தாது, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்ற வளங்களை ஒன்றாக இணைப்பதன் ஊடாக மக்கள் தஙகளது வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அந்த வகையில் சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக இந்த வருடத்தில் 100 மில்லியன் ரூபாய் செலவிலான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உலகத்தில் சுற்றுலாத்துறையானது பல்வேறு வகையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எகடகொ ருவரிசம், மரயன் ருவரிசம், ஹெல்த் ருவரிசம், என்ரற்ரைமன், பீச் ஸ்போர்ட் ருவரிசம் என்று சொல்லமுடியாத வகையிலே. இதைவிட ஐரோப்பிய நாடுகளிலே வளர்ந்து வருகின்றது ரெஸ்போன்சமில் ருவரிசம். அதாவது தாங்கள் வந்து கிராமத்தில் வாழ்கின்ற மக்களோடு இருந்து தங்களது பணம் கிராம மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள். எனவே இந்த விடயங்களினைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது” என்றார்.
48 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago