Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 29 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நிதிச் சேவைகள் அரங்கில் வழிகாட்டியாக விளங்கும் எல்.பீ பினான்ஸ் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் சில புதிய கிளைகளை அண்மையில் திறந்தது.
மியன்மார் தலைமை அலுவலகத்தை 2017 டிசெம்பர் மாதம் Bago பிராந்தியத்தின் Pyay நகரில் வெற்றிகரமாக நிறுவிய எல்.பீ மைக்ரோ பினான்ஸ் மியன்மார் அதன் இரண்டாவது கிளையை Paukkhaung நகரில் சமீபத்தில் திறந்தது.
இக்கிளையின் திறப்பு விழாவில் ராஜிக வியனகே (நாட்டுக்கான முகாமையாளர்), திருமதி ஸோ லா ஈ மோ (மனிதவள மற்றும் நிர்வாக முகாமையாளர்), யூ ஈ நைங் ஆய் (செயற்பாடுகள் முகாமையாளர்), இசுரு துஷான் (நிதிப் பொறுப்பதிகாரி) ஆகியோரும் எல்.பீ மைக்ரோ பினான்ஸ் மியன்மாரின் ஏனைய ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளையில், உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்ததும் வசதியானதுமான சேவையை வழங்குவதற்காக எல்.பீ பினான்ஸ் கிளையும் சேவை நிலையமும் இரத்மலானையில் திறக்கப்பட்டது. இந்த நிலையம் இல.11, கல்தமுல்ல வீதி, மொறட்டுவை என்னும் முகவரியில் அமைந்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை கிளை, இல.153, மடவல வீதி, கட்டுகஸ்தோட்டை என்ற புதிய முகவரிக்கு இடம்மாற்றப்பட்டது.
இவற்றைத் தவிர, தங்கக் கடன் VIP நிலையமொன்று இல. 676, காலி வீதி, கொழும்பு 03 என்னும் முகவரியில் அமைந்துள்ள எல்.பி பினான்ஸ் நகர அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
VIP நிலையம் மற்றும் இரத்மலானை நிலைத்தை அயின்ஸ்லி மோத்தா (பிரதிப் பொது முகாமையாளர்) திறந்துவைத்தார்.
கட்டுகஸ்தோட்டை கிளை அயுவர்தன, சுதீப் பெரேரா ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் எல்.பீ பினான்ஸின் சிரேஷ்ட முகாமைத்துவ அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் அவற்றின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுமார் 47 ஆண்டுகால பெருமைமிகு வரலாற்றைக் கொண்ட ஓர் உறுதிமிக்க முன்னணி நிதி நிறுவனத்தின் தரமுயர்ந்த சேவைகளை இலகுவாகப் பெறும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்குப் புதுமை வழிகளிலான நிதித் தீர்வுகள் விரைவாக வழங்கப்படுவதை எல்.பீ பினான்ஸ் உறுதிப்படுத்துகின்றது.
எல்.பீ பினான்ஸால் வழங்கப்படும் சேவைகளுள் குத்தகை வசதி, தங்கக் கடன்கள், வீடமைப்புக் கடன்கள், கல்விக் கடன்கள், வர்த்தக நிதியுதவி, நிலையான வைப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு போன்ற முதலீட்டு வாய்ப்புகள் என்பனவும் வேறுபல நிதிச் சேவைகளும் உள்ளடங்கும்.
இச்சேவைகள் அனைத்தும் போட்டி ரீதியிலும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த பலாபலன்களைத் தரும் வகையிலும் வழங்கப்படுகின்றன. புதிய மற்றும் தரமுயர்த்தப்பட்ட நிலையங்களில் இருந்து இச்சேவைகளை இலகுவாகவும் பிரச்சினையற்ற முறையிலும் பெற்றுக்கொள்ளலாம்.
1971ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எல்.பீ பினான்ஸ் தற்போது இலங்கையிலுள்ள நம்பிக்கையான மற்றும் மதிப்பு வாய்ந்த நிதி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
இலங்கையரின் இதயத்துக்கு நெருக்கமான ஒரு நிதி நிறுவனம் என்ற முறையில், எல்.பீ பினான்ஸ் இந்த நாட்டு மக்களுக்குக் கவர்ச்சிகமான, தரமுயர்ந்த நிதித் தீர்வுகளைத் தொடர்ந்து வழங்கும்.
NBFI வருடாந்தத் தரப்படுத்தல் மீளாய்வின்போது எல்.பீ பினான்ஸின் நீண்டகாலத் தரப்படுத்தலை ‘A-(lka)’ - Outlook Stable என்று பிச் ரேட்டிங் லங்கா லிமிட்டட் ஊர்ஜிதம் செய்துள்ளது.
27 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago