Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
MAPS இன்டர்நஷனல் பிரைவெட் லிமிட்டட், நீர் பம்பிகள் உற்பத்தியை ஆரம்பித்துள்ளன. ஐரோப்பிய தரங்களுக்கமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நீர் பம்பிகளுடன், உள்நாட்டு சந்தையில் MAPS வர்த்தக நாமம் என்பது பிரபல்யமடைய ஆரம்பித்துள்ளது.
MAPS நீர் பம்பிகள் என்பது இரு ரகங்களைக் கொண்டுள்ளது. 0.50, 0.75 மற்றும் 1.0 குதிரைவலு திறன் கொண்டதாக இந்த பம்பிகள் அமைந்துள்ளன. இந்தத் தயாரிப்புகளைத் தற்போது நாடு முழுவதிலுமுள்ள சகல ஹார்ட்வெயார் கடைகளிலிருந்தும் இலத்திரனியல் சாதனங்கள் விற்பனை நிலையங்களிலிருந்தும் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
MAPS இன்டர்நஷனல் பிரைவெட் லிமிட்டட் பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், 'குறுகிய காலப்பகுதியில் MAPS தயாரிப்புகள் சந்தையில் பிரபல்யமடைவதற்கு அவற்றின் நட்புறவான தன்மை, நீடித்து உழைக்கும் திறன் மற்றும் தங்கியிருக்கும் தன்மை போன்றன காரணமாக அமைந்துள்ளன' என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், 'MAPS இன்டர்நஷனல் கம்பனி என்பது மூன்று வருடங்கள் எனும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த காலப்பகுதியினுள் அதிகளவு கேள்வி MAPSகட்டிட நிர்மாணப்பொருட்கள், MAPS மற்றும் UNICORN டயர் மீள்கட்டமைப்பு மற்றும் டயர் உள்ளக ஃபிளாப்கள், உள்ளக இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் நீர் பம்பிகளுக்குக் காணப்படுகின்றன.
பொது மக்களிடமிருந்து ஆயுPளு தயாரிப்புகளுக்கு காணப்படும் கேள்வி என்பது ஆயுPளு வர்த்தக நாமத்தில் மேலும் பல பொருட்களை அறிமுகம் செய்ய எம்மை தூண்டுவதாக அமைந்துள்ளது' என்றார்.'ஒரு வருட காலப்பகுதிக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த MAPS இலத்திரனியல் சாதனங்கள் பொது மக்களிடமிருந்து துரித கதியில் வரவேற்பை பெற்றிருந்ததுடன், எமது தயாரிப்புகளுக்கு அவர்கள் சான்றாக அமைந்திருந்தனர்.
ஐரோப்பிய தரங்களில் MAPS உள்ளக நீர் பம்பிகளின் அறிமுகம் என்பது ஐந்து வருட உத்தரவாதத்தையும், சகாய விலையையும் கொண்டுள்ளன. MAPS தயாரிப்புகளின் மீது தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு நாம் வழங்கும் மதிப்பாக இது அமைந்துள்ளது. இந்த நீர் பம்பிகள் கவர்ச்சிகரமான விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் கொண்டுள்ளன. இந்த சேவைகளை வழங்கும் வகையில் நாம் விசேடமாகப் பயிற்சிகளைப் பெற்ற செயலணியினரை கொண்டுள்ளோம்' என்றார்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025